மாவீரன் - சம்பளம் வாங்க மறுத்த விஜய் சேதுபதி!
மாவீரன் திரைப்படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி சம்பளமாக ஒரு ரூபாய் கூட பெறவில்லை என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன்.
திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியான 4 நாள்களில் உலகளவில் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் குறைந்த நாளில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த(ரூ.35 கோடி) திரைப்படமாகவும் மாவீரன் உருவாகியுள்ளது.
Advertisement
இதையும் படிக்க: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா எப்போது?
இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மடோன் அஷ்வின், ‘மாவீரன் திரைப்படத்திற்கு பின்னணிக் குரல் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி சம்பளமாக ஒரு ரூபாயைக் குட பெறவில்லை. மேலும், சிவகார்த்திகேயனுக்காக இதைச் செய்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் சினிமா துறையில் நட்பு ரீதியான இந்த அணுகு முறை தொடர வேண்டும் என்று விஜய் சேதுபதி விருப்பம் தெரிவித்தார்’ எனக் கூறியுள்ளார்.