செய்திகள்

புராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்கா சென்ற பிரபாஸ், ராணா டகுபதி ! 

பிரபல தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபதி புராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

DIN

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘புராஜக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் நடிகர் கமல்ஹாசனிடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. பின்னர், கமல்ஹாசன் இணைந்ததை விடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் அம்தாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளதை படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.  

வைஜெயந்தி மூவிஸின் 50வது வருடத்தில் உருவாகும் இந்தப் படத்தினை இயக்குகிறார் நாக் அஸ்வின். மகாநடி படத்தினை இயக்கி பிரபலமானவர் நாக் அஸ்வின்.  இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்பில் உள்ளனர். 

நேற்று நடிகை தீபிகா படுகோனின் முதல் தோற்றப் பார்வை போஸ்டர் மிகவும் தாமதமாக வெளியானது. 

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் அமெரிக்கா சென்றுள்ளார். புராஜக்ட் கே என்றால் என்னவென்று க்ளிம்ஸ் விடியோவினை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூலை 20ஆம் நாள் அமெரிக்காவிலும் ஜூலை 21ஆம் நாள் இந்தியாவிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தககது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT