செய்திகள்

எதிர் நீச்சல் தொடரில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை!

எதிர் நீச்சல் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

எதிர் நீச்சல் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல் தொடருக்கு இல்லத்தரசிகளிடையேயும், பார்வையாளர்கள் இடையேயும் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இந்த தொடர் இரவு 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாள்களுக்கு ஒளிபரப்பாகி வந்தது. தற்போது ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகி வருகிறது.

கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், திரைக்கதை எழுதி எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் நடித்த ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். 

மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா உள்ளிட்ட பலர் இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துவரும் சாந்தி வில்லியம்ஸ், எதிர் நீச்சல் தொடரில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சாந்தி வில்லியம்ஸ் மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர். இவர் சந்திரலேகா, மகராசி, செந்தூரப்பூவே, அழகு உள்ளிட்ட தொடர்களில்  நடித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT