முகப்பு
செய்திகள்

புராஜக்ட் - கே படத்தின் பெயர் அறிவிப்பு!

புராஜக்ட் கே திரைப்படத்தின் பெயர் மற்றும் கிளிம்ஸ் விடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
பகிர்:

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் ’புராஜக்ட் கே’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், படத்தின் பெயர் மற்றும் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘கல்கி 2898’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.