செய்திகள்

பீட்சா 3 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்துள்ள பீட்சா 3 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

DIN

இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்துள்ள பீட்சா 3 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் நடிகர் அஸ்வின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பீட்சா 3. இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாரயணன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். பீட்சா 3 திரைப்படம் மே 12 ஆம் தேதி திரைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திட்டமிட்டப்படி இப்படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில், பீட்சா 3 திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT