செய்திகள்

கேப்டன் மில்லர்: டீசர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். 

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதிரடியாக உருவாகியுள்ள டீசர் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், “ஜூலை 28-ல் சம்பவம் இருக்கு. கில்லர் கில்லர்” என்றும் நடிகர் ஜான் கோக்கன், “ இதற்கு முன் இப்படியான ஒன்றை பார்த்திருக்க மாட்டீர்கள். ஜூலை 28இல் கண்டிப்பாக புல்லரிக்கும்” என்றும் ஏற்கனவே பதிவிட்டிருந்தது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை தூண்டியிருந்தன.  

இந்நிலையில், ஜூலை 28ஆம் நாள் டீசர் வெளியாகுமென படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT