செய்திகள்

கவுண்டமணியின் புதிய படம் குறித்த அறிவிப்பு!

DIN

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'. இப்படத்தை ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி.கே. ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது.

மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி.பி. கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் அறுபது வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவை செய்கிறார். கலை இயக்கத்திற்கு மகேஷ் நம்பியும், படத்தொகுப்புக்கு ராஜா சேதுபதியும் பொறுப்பேற்றுள்ளனர். பி.ஜி. துரை, தீனா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அசோசியேட்டுகளாக பணியாற்றுகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT