செய்திகள்

தமிழ் ரசிகர்கள் சிறிய படங்களையும் வெற்றி பெற வைப்பவர்கள்: நடிகர் ஹரிஷ் கல்யாண்! 

எல்ஜிஎம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் ரசிகர்கள் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

DIN

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க தோனியும், சாக்‌ஷியும் முடிவு செய்திருந்தனர்.

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர். முன்னதாக, இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

எல்ஜிஎம் திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண், “பெரிய படங்களை மட்டுமல்ல அயோத்தி, குட் நைட், டாடா போன்ற சிறிய படங்களையும் தமிழ் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர். இதுமாதிரியான உதவி தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது. இதேபோலத்தான் நாங்கள் எல்ஜிஎம்மை உங்கள் முன்பு கொண்டு வந்துள்ளோம். தோனி தயாரிப்பில் நடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது” எனட்க் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

SCROLL FOR NEXT