இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார். தற்போது, கதை, திரைக்கதை பணிகள் முடிந்ததுள்ளதல் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பாகத்திலும் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நடிக்க அதிதி ஷங்கர் மற்றும் இவானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்.
இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு அடுத்தாண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.