செய்திகள்

சஞ்சய் தத் விடியோவினால் எல்சியூ உறுதியானதா?- ரசிகர்கள் மீண்டும் ஆரவாரம்! 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் எல்சியூவில் இருக்கிறதென மீண்டும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

நடிகர் சஞ்சய் தத் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது விடியோவினை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோ படத்தில் சஞ்சய் தத் பெயர் ‘ஆண்டனி தாஸ்’ என படக்குழு தெரிவித்துள்ளது. 

விக்ரம் இறுதிக் காட்சியில் ‘ரோலக்ஸ்' சூர்யா பேசும்போது மிகப்பெரிய கூட்டம் இருக்கும். அதேபோல ஒரு காட்சியை சஞ்சய் தத் விடியோவிலும் இருப்பதாலும் மேலும் கழுகு (ஈகள்) இருக்கும் காட்சியும் காட்டப்படுகிறது.

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு ‘ஈகள் இஸ் கம்மிங்’ என்று ஒரு பாடல் வரும். இதனால் இது நிச்சயமாக எல்சியூவில் (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) வருமென ரசிகர்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT