செய்திகள்

கயல் ஆனந்தியின் அடுத்த படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகை கயல் ஆனந்தியின் அடுத்த படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.

DIN

நடிகை கயல் ஆனந்தியின் அடுத்த படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழில் கயல் படத்தின் மூலம் பிரபலமான ஆனந்தி, சண்டி வீரன், பரியேறும் பெருமாள் என பல்வேறு படங்களில் தனது நடிப்பின் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், ரஞ்சனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர்  ராஜசேகர் இயக்கத்தில் சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் தற்போது ஆனந்தி நடித்து வருகிறார்.

ஜோஹன் ஷெவனேஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு 'ஒயிட் ரோஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் கூறியதாவது:

கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும். . ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில்  பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள் இன்னும் பல முக்கிய நடிகர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்" என்றார்.

ஒளிப்பதிவு: இளையராஜா வ
படத்தொகுப்பு: கோபிகிருஷ்ணா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT