முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை படமாக எடுக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்த நிலையில், இறுதியாக லவ் ரஞ்சன் தயாரிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
கங்குலியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: பிரபு தேவாவின் அடுத்த படம் இதுதான்!
இந்நிலையில், இப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா தற்போது, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.