செய்திகள்

மாவீரன் இரண்டாவது பாடல்: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் பாடியுள்ளார்களா?

மாவீரன் படத்தின் இரண்டாவது பாடல் எப்போதென அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள்.  இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மாவீரன் திரைப்படம், ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாவீரன் படத்தின் 2வது பாடல் குறித்த ப்ரோமே வெளியாகியுள்ளது. பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் பாடல் பாடியுள்ளார்கள் எனத் தெரிகிறது. ஷ்ரேயா கோஷல் என அதிதியும் சித் ஸ்ரீராமென சிவகார்த்திகேயனும் ஏமாற்றும்படி நகைச்சுவையான ப்ராங் விடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

வரும் 14ஆம் தேதி இரண்டாவது பாடல் வெளியாகுமென இந்த விடியோ மூலம் தெரிவித்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் பாடியிருந்தால் மிகவும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT