செய்திகள்

புகழுக்கு பின்னாலிருக்கும் கடின உழைப்பை யாரும் பார்ப்பதில்லை: ஷாருக்கானின் அசத்தல் பதில்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரசிகரின் புகழ் குறித்த கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் இனையத்தில் கவனம் பெற்றுள்ளது.  

DIN

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘பதான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,050 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. எனவே ஜவான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.  

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில் ரசிகர் ஒருவர், “யாருமே பார்க்காத புகழை நீங்கள் கண்டுள்ளீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு ஷாருக்கான், “இந்த விளையாட்டிற்கு (புகழ்) பின்னால் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறதென யாரும் பார்ப்பதில்லை. நான் அதைதான் நினைத்து மகிழ்கிறேன்” எனக் கூறியுள்ளார்.  

மேலும் சிலர் “எனது வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன்கிறது” என கேள்வி எழுப்ப, “பெட்ரோல் இருக்கா பார்க்கவும்” என ஷாருக் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT