இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் பெரு வெற்றி பெற்றதால் அவரது இந்தியன் 2 மீண்டும் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்துடன் துணிவு திரைப்படத்திற்குப் பிறகு வினோத் இன்னும் புதிய படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை.
இதையும் படிக்க: தந்தையானது மகிழ்ச்சியளிக்கிறது: பிரபு தேவா
இந்தியன் - 2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கமல் - வினோத் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.