ரஜினிகாந்த் 
செய்திகள்

லால் சலாம் படப்பிடிப்பு: கையசைத்த ரஜினி.. ரசிகர்கள் ஆரவாரம் (விடியோ)

புதுச்சேரியில் நடைபெற்று வரும் லால் சலாம் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டார் நடிகர் ரஜினிகாந்த். குவிந்திருந்த ரசிகர்களைப் பார்த்து கை அசைத்த ரஜினிக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

DIN

புதுச்சேரியில் நடைபெற்று வரும் லால் சலாம் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டார் நடிகர் ரஜினிகாந்த். குவிந்திருந்த ரசிகர்களைப் பார்த்து கை அசைத்த ரஜினிக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் லால்சலாம் என்ற படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். 

இதன் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. படிப்பிடிப்பு துவங்கி முதல் 4 நாள்களில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு தனக்குரிய காட்சிகளில் நடித்தார். அதனை தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. மற்ற நடிகர்களுக்கான காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ரஜினியின் காட்சிகளை படம்பிடிப்பதற்கான படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் புதுச்சேரி வந்தார். 

அப்போது நகரப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு செல்லும் போது அவரைப் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு கையை உயர்த்தி சைகை காண்பித்து புன்னகையுடன் டாடா காட்டி உள்ளே சென்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெற்றோரைக் கொலை செய்த நபா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

கரும்பு தோட்டத்தில் புகுந்த மலைப் பாம்பு

வாகனங்கள் மோதல்: இளைஞா், முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

குண்டடம் அருகே மின்கம்பியில் உரசி வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்

SCROLL FOR NEXT