செய்திகள்

விஜய் அண்ணா பிறந்தநாளில் ஆச்சரியம்... காத்திருங்கள்...!: லோகேஷ் கனகராஜ் 

நடிகர் விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் உள்ளதென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். 

DIN

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் முதல் பாடலானது விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தில் நடிகர் விஜய் அறிமுக பாடலைப் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் நடனம் ஆடியுள்ளதாகவும் முதல் பாடலில் மடோனாவின் பங்கு அதிகமிருக்குமெனவும் விடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது: 

விஜய் அண்ணாவின் பிறந்தநாளில் மிகப்பெரிய ஆச்சரியம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. வேறெதும் சொல்ல விரும்பவில்லை. நிச்சயமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையிலிருக்கும். படப்பிடிப்பிற்கு கால தாமதாமாக வருவதற்காக விஜய் அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இன்னும் படத்திற்கு 3 மாதங்கள் உள்ளது. எல்சியூ பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT