செய்திகள்

இந்தியன் 2 ரிலீஸ் தேதி குறித்து தகவல்!

DIN

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.

லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிவடியவுள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

இந்தோனேசியாவில் ஷ்ரத்தா தாஸ்!

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

SCROLL FOR NEXT