செய்திகள்

25 வருட இயக்குநர்: கரண் ஜோஹர் படத்தின் டீசரை வெளியிட்டு வாழ்த்திய ஷாருக்கான்! 

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் புதிய படத்தின் டீசரை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார் ஷாருக்கான். 

DIN

ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவர் கரண் ஜோஹர். ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் எடுத்த கே2ஹெச்2 எனும் குச் குச் ஹோடா ஹேய் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் பல படங்களை தயாரித்துள்ளார். 9 படங்களையும் இயக்கியுள்ளார். 

தற்போது பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட், ரன்வீர் சிங் வைத்து ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானிபடத்தினை இயக்கியுள்ளார். வியாகோம் 18, தர்மா புரடக்‌ஷன் இணைந்து வழங்கும் இந்தப் படத்தின் டீசரை நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். 

நடிகர் ஷாருக்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டீசரை வெளியீட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில் கூறியதாவது:

வாவ், கரண். 25 வருடமாக சினிமா இயக்குநர். நீண்ட காலம் பயணித்துள்ளாய். உனது அப்பாவும் எனது நண்பருமான டாம் அங்கிள் இதை சொர்கத்தில் இருந்து பார்த்து நிச்சயமாக மகிழ்ச்சியு பெருமையும் அடைவார். நானும் எப்போதும் சொல்வது அதிகமான படங்களை எடுங்கள் என்பதுதான். ஏனெனில் நாம் வாழ்க்கைக்கு அளவற்ற அன்பினை கொண்டு வருகிறோம். டீசர் அருமையாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக கொள்கைத் தலைவர்களுக்கு விஜய் மரியாதை

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடி பெயர்! நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்!

பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது: வைகோ

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளியும் அதிரடி குறைவு..!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி!

SCROLL FOR NEXT