முகப்பு
செய்திகள்

ஆதிபுருஷ் படத்தை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம்!

ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
பகிர்:

ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகின.  

படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அமைப்புகள், வசனங்கள், கதாபாத்திரங்களை உருவகப்படுத்தியுள்ள விதம் உள்ளிட்டவை ஹிந்து மதத்தை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக வட மாநிலங்களில் படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், “ஆதிபுருஷ் படத்தின் காட்சிகளும் வசனங்களும் ராமர் மற்றும் ஹனுமானை அவமதிக்கும் விதமாக இடம்பெற்றுள்ளது. இந்த படம் ஹிந்துக்கள் மற்றும் சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆகையால், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஆதிபுருஷ் படத்தை உடனடியாக தடை செய்து, ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கும் தடை செய்ய பிரதமர் மோடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இயக்குநர் ஓம் ராவுத் மற்றும் படத்துக்கு வசனம் எழுதிய மனோஜ் சுக்லா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.