செய்திகள்

ஜெயிலர் இயக்குநர் நெல்சன் பிறந்தநாள்: விடியோ மூலம் வாழ்த்திய கவின்!!

சின்னத் திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன், வெள்ளித் திரையிலும் டாக்டர், பீஸ்ட் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கினார். 

DIN


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். 

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இயக்கி வந்த அவர், வெள்ளித் திரையிலும் டாக்டர், பீஸ்ட் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கினார். 

பிளாக் ஹியூமர் வகை நகைச்சுவைகளில் தனக்கென தனி பாணியை உருவாக்கி படங்களை எடுத்து வரும் இவர், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இயக்குநர் நெல்சன் இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

அவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டாக்டர், பீஸ்ட் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த நடிகர் கவின் அவருக்கு விடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நெல்சன் அவரின் மகனுடன் நடந்து வரும் விடியோவைப் பகிர்ந்து, 'ஹேப்பி பொறந்தநாள் அண்ணன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோவைப் பகிர்ந்த கவினுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

கவின் தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT