செய்திகள்

உதவியாளர்களுக்கு தங்கக் காசு பரிசளித்த ஷ்ரேயா ரெட்டி!

நடிகை ஷ்ரேயா ரெட்டி தன் உதவியாளர்களுக்கு தங்கக் காசுகளைப் பரிசளித்துள்ளார்.

DIN

நடிகை ஷ்ரேயா ரெட்டி தன் உதவியாளர்களுக்கு தங்கக் காசுகளைப் பரிசளித்துள்ளார்.

சில நடிகைகள் தோற்றத்திலேயே தங்கள் ஆளுமையைக் காட்டக்கூடியவர்கள். அந்த வகையில் மிக உறுதியான பெண் என்கிற அடையாளத்துடன் கேமராவில் தோன்றக்கூடிய நடிகை ஷ்ரேயா ரெட்டி. 

விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் ஈஸ்வரியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் ஷ்ரேயா. அதன் பிறகு வெயில், காஞ்சிவரம் உள்ளிட்ட சில படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்தவர் திருமணத்திற்குப் பின் சினிமாவிலிருந்து விலகினார். 

தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் தமிழில் ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் வெளியான ‘சுழல்’ இணையத் தொடர் நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததுடன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. 

சமீபத்தில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், சலார் படத்தில் தனக்கு உதவியாளர்களாக இருந்தவர்களுக்கு நிறைவு நாளில் தங்கக் காசுகளைப் பரிசளித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT