செய்திகள்

லியோ படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

DIN

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் பார்வை போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

மேலும், ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்கும் விதமாக விஜய் குரலில் உருவாகியுள்ள படத்தின் ஒரு பாடலையும் இன்று படக்குழு வெளியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ண மானே... ஸ்வேதா!

தங்கச் சிலை... சப்தமி கௌட!

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

SCROLL FOR NEXT