ஹரிஷ் கல்யாணின் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் முதல் பருவத்தில் கலந்துகொண்டு புகழ் பெற்றவர் ஹரிஷ் கல்யாண். 2018-ல் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
தோனி தயாரிப்பில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'பார்க்கிங்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: கோவையில் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம்: ஷர்மிளா வேதனை
இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படபடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.