கோப்புப்படம் 
செய்திகள்

சின்னத் திரையில் நுழையும் இயக்குநர் விக்னேஷ் சிவன்!

விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். பின்பு தானா சேர்ந்த கூட்டம், நானும் ரெளடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார்.

இது தவிர தயாரிப்பு, பாடலாசிரியர் என பலமுகங்கள் விக்னேஷ் சிவனுக்கு உண்டு.  அஜித்தை வைத்து இயக்கவிருந்த திரைப்படம் பாதியில் நின்று போன நிலையில், அடுத்த திரைப்படம் குறித்த தகவலை விக்னேஷ் சிவன் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், கூடிய விரைவில் விக்னேஷ் சிவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சி பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் இயக்கி தொகுத்து வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எச்சரிக்கை அளவைக் கடந்து செல்லும் யமுனை நதி!

தில்லியின் 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை: மக்கள் வீட்டிற்குள் இருக்க ஐஎம்டி எச்சரிக்கை

தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலில் இருக்கும் சவால்கள் என்ன?

இடபிள்யுஎஸ் மாணவா்கள் விவகாரம்: பொது நல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா கோட்டு கும்பலில் இருவா் கைது

SCROLL FOR NEXT