செய்திகள்

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

தேசிய மகளிா் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

தேசிய மகளிா் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மகளிா் ஆணைய உறுப்பினரும், பாஜக நிா்வாகியுமான குஷ்பு குறித்து பொது மேடையில் அவதூறாகப் பேசிய, திமுக தலைமைக் கழக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனா்.

இந்நிலையில் நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் குஷ்பு, இடுப்பு எலும்பு பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு நடிகை குஷ்பு, அடினோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT