செய்திகள்

நடிகை கங்கனாவின் எமர்ஜென்சி திரைப்படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமா்ஜென்சி  திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி, நடிக்கும் எமா்ஜென்சி  திரைப்படத்தின் படப்பிடிப்பை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த அனுமதி கோரி மக்களவை செயலாளருக்கு கடிதம் அனுப்பி பரப்பினை கிளப்பினார். 

முன்னாள் இந்திய பிரதமா் இந்திர காந்தி, கடந்த 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினாா். அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தை தயாரித்து, தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாா் கங்கனா ரணாவத்.

இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விடியோவினை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், “மக்களை காப்பவரா அல்லது சர்வாதிகாரியா? நமது நாட்டின் தலைவர் மக்களின்மீது போரை அறிவித்த போது இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களை பார்வையிடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 

எமா்ஜென்சி திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகுமென கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT