முகப்பு
செய்திகள்

பிரபல காமெடி நடிகரின் மகனை மணக்கும் அர்ஜுனின் மகள்?

நடிகர் அர்ஜுனின் மகளுக்கும், தம்பி ராமையாவின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 25 ஜூன் 2023, 7:56 pm IST
பகிர்:

நடிகர் அர்ஜுனின் மகளுக்கும், தம்பி ராமையாவின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளன. இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் சொல்லிவிடவா படத்திலும், கன்னட படம் ஒன்றிலும் அவர் நடித்திருக்கிறார். 

பின்னர் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா, தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதியை நீண்ட காலமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல் பரவிவருகிறது. 

Advertisement

Advertisement

ஆனால் இதுகுறித்து இருத்தரப்பினரும் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.