முகப்பு
செய்திகள்

நடிகர் பிருத்விராஜுக்கு படப்பிடிப்பில் காயம்: மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் பிருத்விராஜுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
நடிகர் பிருத்விராஜ்
பகிர்:

கொச்சி: பிரபல நடிகர் பிருத்விராஜுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்து உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் பிருத்விராஜ். மேலும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் வலம்வருகிறார்.

தற்போது ஜெயன் நம்பியார் இயக்கி வரும் ‘விளையாத் புத்தா’ என்ற மலையாள படத்தில் பிருத்விராஜ் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மறையூரில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், பிருத்விராஜ் நடிக்கும் சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்ட நிலையில், திடீரென கீழே விழுந்ததில் பிருத்விராஜின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதலுதவி அளிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிருத்விராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் காலில் ஏற்பட்ட காயம் பலமாக உள்ளதால், இன்று பிருத்விராஜுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அடுத்த சில மாதங்களுக்கு பிருத்விராஜால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →