செய்திகள்

மாவீரன் படத்தின் புதிய அப்டேட்!

மாவீரன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

மாவீரன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மாவீரன் திரைப்படம், ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

இந்நிலையில், மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு(Pre Release Event) ஜூலை 2 ஆம் தேதி, சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலகிரி, கொடைக்கானலில் உறைபனி எச்சரிக்கை!

"ஆண்களுக்கு இலவச பேருந்து!": எடப்பாடி பழனிசாமி | அதிமுகவின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்!

பிபிஎல் தொடரில் அவமதிக்கப்படும் பாகிஸ்தான் வீரர்கள்? புலம்பும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT