செய்திகள்

புதிய தொடரில் நடிக்கும் பாரதி கண்ணம்மா நடிகை!

ரஞ்சிதமே என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

DIN

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ரஞ்சிதமே தொடரில் நடிகை ரூபா ஸ்ரீ நடிக்கவுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வினுஷா தேவி, சிபு சூர்யன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் தொடரில் துணைக் கதாபாத்திரத்தில் ரூபா ஸ்ரீ நடித்து வருகிறார். 

ரூபா ஸ்ரீ

இவர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ரஞ்சிதமே என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

காதலர்களான ரஞ்சித் - ரஜினி ஆகிய இரு கதாபாத்திரங்களிடையே நடக்கும் ஈகோ சண்டையை மையப்படுத்தி இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. ரஞ்சித் பாத்திரத்தில் ஷிவ் சதிஷ், ரஜினி பாத்திரத்தில் மணிஷா ஜித் நடிக்கின்றனர். 

இதில் ரஞ்சித்தின் தாயாராக ரூபா ஸ்ரீ நடிக்கவுள்ளார். ரஞ்சிதமே முன்னோட்ட விடியோவில் பதிவுத் திருமணம் செய்துகொள்ளச் செல்லும் ரஞ்சித்தை, தாயார் ரூபா ஸ்ரீ கட்டாயத்தின்பேரில் திருமணத்தை நிறுத்தி அழைத்துச்செல்கிறார். 

காதலித்தவனையே கரம்பிடிப்பேன் என்று உறுதியுடன் நிற்கிறார் ரஜினி. இவர்கள் மூவருக்கும் இடையிலான திரைக்கதையே ரஞ்சிதமே தொடராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சின்னத் திரை தொடர்களில் பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் ரூபா ஸ்ரீ. குறிப்பாக அம்மா பாத்திரங்களில் இவர் நடித்து கவனம் ஈர்த்தவர். 

தெய்வம் தந்த வீடு, சீதா கல்யாணம், ராஜா ராணி, பாரதி கண்ணம்மா, உள்ளத்தை அள்ளித்தா, இலக்கியா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். 

இவர் 1992ஆம் ஆண்டு வெளியான கள்ளனும் போலீஸும் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT