செய்திகள்

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ஆண்டிப்பட்டி கணவாக் காத்து!

தர்மதுரை படத்தில் இடம்பெற்ற ‘ஆண்டிப்பட்டி கணவாக் காத்து’ பாடல் யூடியூபில் நூறு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

DIN

தர்மதுரை படத்தில் இடம்பெற்ற ‘ஆண்டிப்பட்டி கணவாக் காத்து’ பாடல் யூடியூபில் நூறு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தர்மதுரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. 

இப்படத்தில் இடம்பெற்ற ‘எந்தப் பக்கம்’ பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்து தேசிய விருது பெற்றார். மேலும், படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தைப் ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வைரமுத்து எழுதிய ‘ஆண்டிப்பட்டி கணவாக் காத்து ஆள் தூக்குதே’ பாடல் யூடியூப்பில் 10 கோடி(100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT