முகப்பு
செய்திகள்

தங்கலான் படப்பிடிப்பு தீவிரம்

தங்கலான் படப்பிடிப்பு படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
பகிர்:

தங்கலான் படப்பிடிப்பு படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே, படப்பிடிப்புக்கான ஒத்திகையின்போது விபத்தில் சிக்கிய விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால், சிறிது காலம் ஓய்வில் இருந்தார். தற்போது, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். 

இந்நிலையில், தங்கலான் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாக தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கீரின் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →