முகப்பு
செய்திகள்

அரண்மனை 4-ல் இணையும் பிரபல நடிகைகள்

அரண்மனை படத்தின் 4 ஆம் பாகத்தில் பிரபல நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
பகிர்:

அரண்மனை படத்தின் 4 ஆம் பாகத்தில் பிரபல நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில்  ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் வெற்றி காரணமாக, ’அரண்மனை - 2’ திரைப்படத்தை 2016இல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து இயக்கினார்.

பின்னர் இந்தப்படமும் வசூலைக் குவித்ததைத் தொடர்ந்து 2021இல் ’அரண்மனை 3’ எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

தற்போது, ’அரண்மனை 4’ படத்தை இயக்க சுந்தர்.சி திட்டமிட்டிருக்கிறார்.  இதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவலும் வெளியானது. ஆனால், சம்பளப் பிரச்னை காரணமாக விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகைகள் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →