செய்திகள்

ஆஸ்கர் மேடையில் ‘நாட்டுக் கூத்து’ பாடல் நிகழ்ச்சி!

ஆஸ்கர் விருது மேடையில் ‘நாட்டுக் கூத்து’ பாடலை நேரடி ஒளிப்பரப்பில் பாடகர்கள் பாட உள்ளனர்.

DIN

ஆஸ்கர் விருது மேடையில் ‘நாட்டுக் கூத்து’ பாடலை நேரடி ஒளிப்பரப்பில் பாடகர்கள் பாட உள்ளனர்.

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

மேலும், ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் இப்படத்தை விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 5 பாடல்களில் ஒன்றாக ’நாட்டுக் கூத்து’ பாடலும் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. 

95-ஆவது ஆஸ்கா் விழா வருகிற மாா்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விழாவின்போது ஆஸ்கர் மேடையில் ‘நாட்டுக் கூத்து’ பாடலை தெலுங்கில் பாடிய ராகுல் சிப்லிகுன்ச், காலா பைரவா ஆகியோர் நேரடி ஒளிப்பரப்பில் பாடவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT