செய்திகள்

'இதை மறக்க மாட்டேன்..’ டாடா படத்தைப் பாராட்டிய கார்த்தி!

பிக் பாஸ் கவினின் டாடா திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

பிக் பாஸ் கவினின் டாடா திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான ’டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி, ‘இறுதியாக டாடா படம் பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம்! இதுபோன்ற எழுத்தையும் இயக்கத்தையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கவின் உள்பட அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதைப் பகிர்ந்த கவின், “5 நிமிட அழைப்பிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள். ஆனால் , ‘இந்தப் படத்தை நினைவில் வைத்திருப்பேன்’ என நீங்கள் சொன்னதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். வாழ்க வளமுடன் வந்தியத்தேவா” என கார்த்திக்கு பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT