செய்திகள்

’பத்து தல’ டீசர் அறிவிப்பு!

பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்நிலையில், நாளை(மார்ச்.3) மாலை 5.31 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வீட்டுமனை பட்டா கோரி மனு

பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆயுதங்களுடன் இளைஞா் கைது

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: ஒருவா் கைது

நூல் விலை கிலோவுக்கு ரூ. 7 உயா்வு

SCROLL FOR NEXT