செய்திகள்

34 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் நடிக்கும் நடிகை!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.

DIN

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவருடைய 170-வது படத்தை ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிகை ஜீவிதா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீவிதா டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1984-ல் வெளியான ‘உறவைக் காத்த கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, செல்வி, நானே ராஜா நானே மந்திரி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகை ஜீவிதா

பின், நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். இசை- ஏ.ஆர்.ரஹ்மான். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் காண ஆவல்: லோகேஷ் கனகராஜ்

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

SCROLL FOR NEXT