செய்திகள்

சீரியலில் மட்டுமல்ல... நிஜ வாழ்க்கையிலும் இணைந்த நடிகர்கள்!

சின்னத்திரைத் தொடரில் காதலர்களாக நடித்து திருமணம் செய்துகொண்ட விஷ்ணுகாந்த் - சம்யுக்தா தம்பதி, தற்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர். 

DIN


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'சிப்பிக்குள் முத்து'  தொடரில் நடித்துவந்த விஷ்ணுகாந்த் - சம்யுக்தா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஒளிபரப்பாகி வந்தது. இந்தத் தொடர் தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த 'செல்லேலி காபுரம்' என்ற தொடரிம் மருஉருவாக்கமாகும்.

தங்கை தான் விரும்பிய காதலனை திருமணம் செய்துகொள்ள தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் அக்கா, மனநலம் குன்றியவரை திருமணம் செய்துகொண்டு என்னென்ன சவால்களை சந்திக்கிறாள் என்பதே 'சிப்பிக்குள் முத்து' தொடரின் கதை.  

ஜெய் டிசோசா - லாவண்யா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக விஷ்ணுகாந்த் - சம்யுக்தா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர்.

இந்நிலையில், சின்னத்திரைத் தொடரில் காதலர்களாக நடித்து திருமணம் செய்துகொண்ட விஷ்ணுகாந்த் - சம்யுக்தா தம்பதி, தற்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்களை விஷ்ணுகாந்த் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT