செய்திகள்

படப்பிடிப்பில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம்

ஐதராபாத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. 

DIN

ஐதராபாத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. 

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் புராஜெக்ட் கே. ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதரபாத்தில் நடைபெற்று வருகிறது. 

ஐதராபத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு வலது விலா எலும்பு முறிவு மற்றும் தசை நார் கிழிந்தது சி.டி. ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது. 

பின்னர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுக்க வீடு திரும்பி விட்டதாக அவர் ட்விட் செய்துள்ளார். அமிதாப் பச்சன் காயமடைந்ததையடுத்து ஐதராபாத்தில் நடைபெற்று வந்த புராஜெக்ட் கே படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிஏ சின்னங்கள் நிராகரித்தால் மீண்டும் காட்டாட்சி: அமித் ஷா எச்சரிக்கை!

இந்தோனேசியாவில் பள்ளிக்கூடம் அருகில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்? 54 பேர் படுகாயம்!

உருவ கேலி! நடிகை கௌரி கிஷனுக்கு குவியும் பாராட்டு! யூடியூபருக்கு எதிர்ப்பு!

தி கேர்ள்பிரண்ட்... ரஷ்மிகா மந்தனா!

8 ஆண்டுகளுக்குப் பிறகு... உள்ளூர் போட்டியில் கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

SCROLL FOR NEXT