அதிநவீன கேமராவில் ‘லியோ’ படப்பிடிப்பு!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தில் அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தில் அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: போஸ்டர் அறிவிப்புடன் துவங்கியது ‘லால் சலாம்’ படப்பிடிப்பு
தற்போது, படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் ரெட் கேமரா வகைகளில் அதிநவீன கேமராவான ‘வி ராப்டார் எக்ஸ் எல்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் நிலவும் கடும் பனி காரணமாக காட்சிகளை துல்லியமாக எடுக்க இந்தக் கேமராவை படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்சா தேர்ந்தெடுந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரெட் கேமராவின் பெரியப்பா வந்துவிட்டார்’ என மகிழ்ச்சியாக விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
மனோஜ் பரமஹன்சா பீஸ்ட் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். குறிப்பாக, அரபிக் குத்து பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதத்திற்காக பல பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.