ஆஸ்கர் விருது: வாக்கு செலுத்திய சூர்யா!
ஆஸ்கர் விருதுக்கான வாக்கை செலுத்தியுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கான வாக்கை செலுத்தியுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
95-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முறை ஆஸ்கர் விருதிற்கான ’ஒரிஜினல் பாடல்’ பிரிவின் இறுதிப்பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடல் இடம் பெற்றள்ளது.
பலரும் இப்பாடலுக்கு ஆஸ்கர் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர். மேலும், ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் பெறும் வாக்குகளும் விருதிற்கான தகுதியில் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படும்.
இந்நிலையில், விருதிற்கான தன் வாக்கை செலுத்தியுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.