செய்திகள்

படப்பிடிப்பில் சதமடித்த ஜெயிலர்!

நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் 'ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு 100வது நாளானெ தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கிறார்.

நாயகியாக தமன்னா நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 

படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. சமீபத்தில் மங்களூருவில் ரஜினி - சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கி இன்றோடு 100வதுநாளாக படப்பிடிப்பு நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சன் பிக்ஸர்ஸ் இது தொடர்பான் அறிவிப்பை விரைவில் வெளியிடுமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT