விரைவில் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4: தொகுப்பாளர் யார்?
மூன்று சீசன்களின் வெற்றிக்குப் பிறகு, 'ஸ்டார்ட் மியூசிக்' சீசன் 4 கேம் ஷோ விரைவில் விஜய் டிவியில் தொடங்க உள்ளது.
மூன்று சீசன்களின் வெற்றிக்குப் பிறகு, 'ஸ்டார்ட் மியூசிக்' சீசன் 4 கேம் ஷோ விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
பிரபல தொலைக்காட்சி பிரபலங்கள் இந்த 'ஸ்டார்ட் மியூசிக்' ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
பிரியங்கா தேஷ்பாண்டே 'ஸ்டார்ட் மியூசிக்' சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். தற்போது வெளியுள்ள ப்ரோமோவில் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பாடலுடன் பிரியங்கா தேஷ்பாண்டே நடனமாடுவது இடம்பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த கேம் ஷோவைப் பற்றி பேசிய பிரியங்கா தேஷ்பாண்டே கூறுகையில், "இதுபோன்ற அற்புதமான நகைச்சுவை கலந்த வேடிக்கையான விளையாட்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன், இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு பார்வையாளர்களையும் மகிழ்விக்கும், மேலும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
கடந்த சீசனை மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனை பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கவுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.