முகப்பு
செய்திகள்

பாரதிராஜா இயக்கத்தில் புதிய படம்!

இயக்குநர் பாரதிராஜா புதிய படமொன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 16 மார்ச், 2023 at 11:30 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:15 PM

இயக்குநர் பாரதிராஜா புதிய படமொன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் அவரின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. 

தற்போது, நித்திலன் இயக்கும் விஜய் சேதுபதி படத்திலும் நிர்மல் குமாரின் ‘நா நா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவான ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்நிலையில், மீண்டும் பாரதிராஜா கிராமத்துப் பின்னணியில் திரைப்படம் இயக்க உள்ளதாகவும் இப்படம் பெண் கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு உருவாகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.