செய்திகள்

சாமி படத்தின் 20வது வருஷம்: விக்ரம் கூறியது என்ன தெரியுமா?   

நடிகர் விக்ரம் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான படம் இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது. 

DIN

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்து 2003ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி வெளியான படம்தான் சாமி. விக்ரம் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் முக்கியமான படமாக அமைந்தது. நடிகை த்ரிஷாவிற்கும் இந்தப் படம் நல்ல பெயரினை தந்தது. அப்போதே கிட்டதட்ட 50 கோடி வசூலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் த்ரிஷாவின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தது. இதன் இரண்டாம் பாகம் 2018இல் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. 

இந்நிலையில் சமூகவலைதளங்களில் 20இயர்ஸ் ஆஃப் சாமி எனும் ஹேஷ்டேக் டிரெண்டானது. இதனை தொடர்ந்து, நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் சாமி படத்தின் விடியோவை பகிர்ந்து, “மிகவும் சிறப்பான மறக்க முடியாத அனுபவங்கள்” என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் தெரு நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா பயிற்சியாளர்கள் படுகாயம்!

2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

SCROLL FOR NEXT