FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்ஸ்டா லைக்குகள் வாக்குகளாக மாறாது! விஜய்யை விமர்சித்த குஷ்பு!

கல்விச் சிந்தனை அரங்கில் குஷ்புவும் தனஞ்செயனும் பேசியது பற்றி...

Updated On : 2 மார்ச் 2026, 7:29 pm IST
கல்விச் சிந்தனை அரங்கில் குஷ்பு
பகிர்:

சமூக ஊடகங்களில் கிடைக்கும் லைக்குகளும், ஷேர்களும் வாக்குகளாக மாறாது என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் திரைப்புக்கு அப்பால் உங்கள் குரல் என்ற தலைப்பில் பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்புவும், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதில், உரையைத் தொங்கிய குஷ்பு பேசியதாவது:

Advertisement

Advertisement

”நான் என்னை திரைத் துறையை சார்ந்தவராகவோ அரசியல்வாதியாகவோ நினைக்கவில்லை. நான் சார்ந்த சமூகத்தின் அங்கமாகவே எண்ணுகிறேன். பெண்கள், குழந்தைகள் சார்ந்த பிரச்னைகளில் நான் சார்ந்த கட்சியை கடந்தும் கருத்து தெரிவித்துள்ளேன்.

என்னுடைய மனசாட்சிக் உண்மையாக இல்லையென்றால் என்னால் தூங்க முடியாது வாழவும் முடியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய தனஞ்செயன் பேசியதாவது:

“தமிழ்நாட்டில் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது. சினிமாவில் சாதித்தவர்கள்கள் அரசியலை சாதித்துள்ளார்கள். 2026 தேர்தலில் ஒருவரின் வருகையால் ஒட்டுமொத்த நிலைமையும் மாறியுள்ளது. விஜய்க்கு 15 சதிவீதம் கிடைக்குமா? 30 சதவீதம் கிடைக்குமா? என்று விவாதம் நடக்கிறது. அரசியல் கட்சிகள் கூட பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். விஜய் பெரும் வாக்கு சதவீதம் விளைவை ஏற்படுத்தலாம். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் சினிமா மிகவும் சக்தி வாய்ந்தது. சமூக ஊடகங்கள் முழுவதும் எனது வாக்கு விஜய்க்கு என்று இளைஞர்கள் கூறுகிறார்கள்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து குஷ்பு பேசியதாவது:

“நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரும் சமூக ஊடகத்தில் கட்டமைக்கப்படவில்லை. அவர்களின் கட்சியை கட்டமைத்தார்கள்.

சமூக ஊடகங்களில் கிடைக்கும் லைக், சேர்கள் ஒருபோதும் வாக்காக மாறாது. உதாரணம் கமலஹாசன். அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஆந்திரத்தில் சிரஞ்சீவியின் முதல் கூட்டத்துக்கு 5 லட்சம் பேர் வந்தார்கள். ஆனால் அவர் தேர்தலில் தோற்றார். மக்களுக்காக அவர் என்ன கொடுக்கப் போகிறார் என்றுதான் பார்ப்பார்கள். அதிகபட்சம் 15, 16 சதவீத வாக்குகளை மட்டுமே பெறுவார். அதனால் அரசமைக்கும் கட்சிக்கு இடையூறு ஏற்படுமா? யாருக்கு ஏற்படும்? என்பதை தான் பொறுத்திருந் பார்க்க வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் பேசுபவர்கள் காலை 6 மணிக்கு எழுந்து சென்று வாக்கா மாட்டார்கள். வாக்கு செலுத்தாத மக்களுக்கு எந்த அரசாங்கம் அமைத்தாலும் ஏன் தண்ணீர் வரவில்லை? சாலை சரியில்லை? என்று கேள்வி கேட்கும் உரிமை கிடையாது.

தெருவும் சென்று வேலை பார்த்தால்தான் மக்கள் உங்களுக்கு வாக்கு செலுத்துவார்கள். எம்ஜிஆர் படுக்கையில் படுத்தபடி வெற்றி பெற்றார் என்பது கிடையாது. அவர் மக்களுக்காக வேலை செய்துள்ளார். மக்களுடன் தொடர்பு இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.” எனத் தெரிவித்தார்.

summary

Insta likes doesn't turn into votes! Khushbu criticizes Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments