முகப்பு
செய்திகள்

ஃபர்ஹானா: ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் ஆண்ட்ரியா பாடிய பாடல்! 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஃபர்ஹானா திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார். 

சமீபத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் வெளியானது. தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், அனுமோல், ஐவர்யா தத்தா மற்றும் பலர் நடித்துள்ளார். 

மே12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாக உள்ளது. 

ஜஸ்டின் பிராபகரன் இசையில் உமாதேவி வரிகளில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா குரலில் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.