பொன்னியின் செல்வனை மாட்டிவிட்ட வானதி: வைரலாகும் புகைப்படம்!
பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி தூங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’.
முதல் பாகம், கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது.
இதையும் படிக்க: மாமன்னன் படத்தின் புதிய போஸ்டர்: ரிலீஸ் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக நடித்த ஷோபிதா இணைந்து படப்பிடிப்பில் நடனமாடிய விடியோ இணையத்தில் 2 நாள்கள் முன்பு வைரலானது. இந்நிலையில் நடிகை ஷோபிதா பகிர்ந்த புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
இதையும் படிக்க: நான் வழக்கறிஞர் என்பதால் சீரியஸான ஆள் கிடையாது: அதிதி பாலன்
படப்பிடிப்பில் ஜெயம் ரவி உறங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவிற்கு நடிகை த்ரிஷா கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.