கமல்ஹாசனுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் அஸ்வின் மடோன் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிக்க: லவ் ஜிகாத்.. ஐஎஸ்ஐஎஸ்.. தி கேரளா ஸ்டோரியின் அரசியல்!
ஆனால், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 21-வது படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.